பாகிஸ்தான் ட்ரோனை விரட்டிய எல்லை பாதுகாப்பு படை !!

  • Tamil Defense
  • March 15, 2021
  • Comments Off on பாகிஸ்தான் ட்ரோனை விரட்டிய எல்லை பாதுகாப்பு படை !!

பஞ்சாப் மாநிலம் பனியால் பகுதியில் பாகிஸ்தான் எல்லையோரம் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது இந்திய பகுதிக்குள் டின்டா காவல்சாவடி அருகே பாகிஸ்தான் ட்ரோன் நுழைந்தது.

இதனை கண்டதும் எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளால் சுட ட்ரோன் திரும்பி சென்றது.

பின்னர் ஏதேனும் பொருளை ட்ரோன் விட்டு சென்றதா என தேடுதல் நடத்தினர் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலமாக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களை கடத்த முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.