
இந்தியாவுக்கு டேங்கர் விமானங்களை வழங்க போயிங் விருப்பம் !!
இந்திய விமானப்படைக்கு நீண்ட காலமாகவே டேங்கர் விமானங்களை வாங்க தீவிர முயற்சி நடந்து வருகிறது.
பலமுறை விமானங்களை தேர்வு செய்த போதிலும் நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமல் போகும் போக்கு நிலவி வருகிறது.
இதனையடுத்து இந்திய விமானப்படை குத்ததை அடிப்படையில் இவ்வகை விமானங்களை பெற முயற்சிக்கிறது, இதற்கான போட்டியில் ஏர்பஸ் நிறுவனம் உள்ளது.
தற்போது போயிங் நிறுவனமும் குத்தகை அடிப்படையில் தனது கேசி46 ரக டேங்கர் விமானத்தை அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இது பற்றி போயிங் நிறுவன அதிகாரிகள் பேசுகையில் இந்த விமானத்தின் அளவு இந்திய சூழலுக்கு மிகவும் உகந்தது,
காரணம் இதனால் இந்தியாவில் உள்ள 100க்கும் அதிகமான சிறிதும் பெரிதுமான விமான நிலையங்களில் இருந்து இயங்க முடியும்.
மேலும் இந்த வகை விமானங்கள் அணு, வேதியியல் மற்றும் உயிரியியல் தாக்குதல்களின் போதும் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டவை ஆகும்.