வினாத்தாள் வெளியானதால் நாடுதழுவிய ராணுவ எழுத்து தேர்வு நிறுத்தம் !!

  • Tamil Defense
  • March 2, 2021
  • Comments Off on வினாத்தாள் வெளியானதால் நாடுதழுவிய ராணுவ எழுத்து தேர்வு நிறுத்தம் !!

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் ராணுவ சிப்பாய்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற இருந்தது.

அதற்கு சில மணி நேரம் முன்னர் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் எழுத்து தேர்வுக்கான வினாத்தாளில் உள்ள கேள்விகள் இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ராணுவ அதிகாரிகள் உடனடியாக எழுத்து தேர்வை நிறுத்தினர், பின்னர் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து விஷ்ராந்த்வாடி காவல்நிலைய ஆய்வாளர் கூறுகையில் வினாத்தாளை உள்ளிருக்கும் யாரோ ஒருவர் தான் வெளியிட்டு இருக்க வேண்டும் என கூறினார்.

ராணுவ அதிகாரிகள் கூறுகையில் எத்தகைய முறைகேடான நடவடிக்கைகளுக்கும் இடம் தரப்போவதில்லை எனவும், சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்படுவர் எனவும் கூறினர்.