ராணுவத்தில் இணையும் மற்றொரு கவச வாகனம் !!

  • Tamil Defense
  • March 30, 2021
  • Comments Off on ராணுவத்தில் இணையும் மற்றொரு கவச வாகனம் !!

சமீபத்தில் இந்திய தரைப்படைக்கு சுமார் 1300 இலகுரக மஹிந்திரா கவச வாகனங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள்.

அந்த வகையில் கல்யானி குழுமத்தின் எம்4 ரக கவச வாகனமும் இந்திய தரைப்படையில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்யானி எம்4 கவச வாகன ஒப்பந்தமானது 177 கோடி ருபாய் மதிப்பினை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாகனமானது தென்கொரியாவை சேர்ந்த பாரமவுன்ட் குழுமத்தின் அனுமதியோடு இந்தியாவில் கல்யானி குழுமத்தால் தயாரிக்கப்படுகிறது.

இந்த கவச வாகனத்தில் 8 பேர் பயணிக்க முடியும் அல்லது 2.3 டன்கள் அளவிலான எடையை சுமக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாகனம் கனரக மற்றும் இலகுரக இயந்திர துப்பாக்கிகள், அஸ்ஸால்ட் ரைஃபிள்கள் போன்றவற்றில் இருந்து வீரர்களை பாதுகாக்கும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.