அமெரிக்கா இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மதிக்கிறது !!
அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் தினசரி செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
அப்போது இந்த வருடமும் 20பில்லியின் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் இதில் பல அதிநவீன தளவாடங்களும் அடக்கம் எனவும் அவர் கூறினார்.
மேலும் பேசுகையில் இந்த ஆயுத வர்த்தகம் இந்தியாவின் பாதுகாப்பு உரிமைகளையும், அதன் இறையாண்மையையும் அமெரிக்கா மதிப்பிதை காட்டுகிறது என்றார்.
இது எங்களது உலகளாவிய முலோபாய முக்கியத்துவம் கொண்ட ஒத்துழைப்பின் ஒரு பகுதி எனவும் கூறினார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜீத் சிங் சந்து பேசுகையில் இந்திய அமெரிக்க உறவுகள் நல்ல நிலையில் உள்ளதாகவும், ராணுவ ரீதியான ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா அமெரிக்கா உடன் லெமோவா, காம்காஸா, பேக்கா உள்ளிட்ட ஒப்பந்தங்களை செய்துள்ளது அதே நேரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கிய பாதுகாப்பு கூட்டாளி எனும் அந்தஸ்தை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.