இந்தியா வருகிறார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் !!

  • Tamil Defense
  • March 8, 2021
  • Comments Off on இந்தியா வருகிறார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் !!

இந்த மாதம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜே ஆஸ்டின் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வருகிறார்.

இந்த சுற்றுபயணத்தின் போது முக்கிய தலைவர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகள் , பாதுகாப்பு சவால்கள் குறித்து பேச உள்ளார்.

மேலும் இந்தியா அமெரிக்கா இடையிலான ஆயுத வர்த்தகம் பற்றியும் இந்திய தலைவர்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் க்வாட் நாடுகளின் தலைவர்களான ஜோ பைடன், நரேந்திர மோடி, ஸ்காட் மோரிசன் மற்றும் யோஷிஹிடே சுகா ஆகியோரின் சந்திப்பு பற்றியும் பேச உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.