அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுடன் உயர்மட்ட நிகழ்வுகள் எதுவும் இதுவரை பெரிதாக நடைபெறவில்லை.
இந்த நிலையில் புதிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் தனது முதல் வெளிநாட்டு சுற்றுபயணமாக இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியானது.
இதனை இந்திய அமெரிக்க அரசுகள் உறுதிபடுத்தினாலும் இதுவரை தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இரண்டு நாள் சுற்றுபயணமாக இந்த மாதம் 19-20 ஆகிய தேதிகளில் அவர் இந்தியா வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.