தூதரை திரும்ப அழைக்கும் அளவுக்கு மோசமான ரஷ்ய அமெரிக்க உறவு !!

  • Tamil Defense
  • March 20, 2021
  • Comments Off on தூதரை திரும்ப அழைக்கும் அளவுக்கு மோசமான ரஷ்ய அமெரிக்க உறவு !!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பரபரப்பான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு செய்தியாளர் ரஷ்ய அதிபர் அமெரிக்க தேர்தல்களில் தலையிட்டு முறைகேடு செய்ததாக கூறப்படுவது குறித்து கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த பைடன் அதற்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என கூறினார்.

மேலும் ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலேக்ஸேய் நவால்னி ரஷிய அதிபரால் கொல்லபட்டதாக நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் என பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து ரஷ்யா தனது தூதர் அனாடோலி ஆண்டோனோவை திரும்ப மாஸ்கோவுக்கு அழைத்து உள்ளது.

மேலும் அமெரிக்க அதிபரின் செயல்பாடு அபத்தமானது என்றும் இரு தரப்பு உறவுகளின் நிரந்தர சேதத்தை தவிர்ப்பது அமெரிக்காவின் கையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இது பற்றி பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி அதிபர் பைடன் தனது கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்தார்.