இந்தியா இரஷ்யாவுடன் இணைந்து சீனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படும் என தோன்றவில்லை என அமெரிக்கா நினைப்பதாக கருத்து வெளியாகியுள்ளது.மேலும் இதன் மூலம் சீனாவுக்கு எதிரான சக்திமிக்க இந்தியா என்ற அமெரிக்காவின் பார்வைக்கு இது எதிராக உள்ளதாக கருத்து வெளியாகியுள்ளது.
தற்போது தான் மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் இந்தியா வந்திருந்தார்.மேலும் அமெரிக்காவிற்கு இந்தியா இரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 அமைப்புகள் வாங்குவது பிடிக்கவில்லை.இதன் மூலமாக அமெரிக்கா இந்தியா மீது ஏதேனும் தடைகள் விதித்தால் இந்திய-அமெரிக்க உறவு கடுமையாக பாதிக்கப்படும்.இது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருவருக்குமே நல்லதல்ல.
CAATSA சட்டத்தின் மூலம் இந்தியா மீது அமெரிக்கா தடை விதிக்கலாம்.ஏற்கனவே கடந்த 2020ல் துருக்கி மீது அமெரிக்கா இதே போன்றதொரு தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.