பாகிஸ்தானுக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விற்க துருக்கிக்கு தடை விதித்த அமெரிக்கா !!

  • Tamil Defense
  • March 13, 2021
  • Comments Off on பாகிஸ்தானுக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விற்க துருக்கிக்கு தடை விதித்த அமெரிக்கா !!

துருக்கி அகஸ்டா ஏ129 ஹெலிகாப்டரை அடிப்படையாக கொண்ட ஏடாக்-129 எனும் தாக்குதல் ஹெலிகாப்டரை தயாரித்து பயன்படுத்தி வருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு இத்தகைய 30 தாக்குதல் ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானிற்கு விற்க துருக்கி ஒப்பந்தம் செய்தது.

சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் துருக்கியின் ஏற்றுமதி வரலாற்றிலேயே மிகப்பெரியதாகும்.

ஆனால் துருக்கி ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 வாங்க முடிவு செய்ததையடுத்து அமெரிக்காவுடனான உறவு மோசமடைந்தது.

மேற்குறிப்பிட்ட ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் என்ஜின் அமெரிக்க தயாரிப்பு ஆகும். ஆகவே துருக்கி அதனை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக இந்த ஒப்பந்தம் ரத்தாகும் சூழல் நிலவுகிறது, அமெரிக்காவை சமாதானப்படுத்தும் துருக்கியின் எந்தவொரு முயற்சியும் பலனளிக்கவில்லை.

ஆகவே பாகிஸ்தான் சீனாவின் இசட்-10 ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்கும் சூழல் உருவாகி உள்ளது.

எப்படியானாலும் இந்தியாவுக்கு இது நல்ல செய்தியல்ல என்பது குறிப்பிடத்தக்கது.