
சமீபத்தில் அமெரிக்க செனட்டில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது அப்போது பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
இதில் இந்தோ பசிஃபிக் கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் ஃபிலிப்ஸ் டேவிட்சன் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது சமீபத்திய சீன நடவடிக்கைகள் இந்தியாவின் பார்வையை மாற்றியுள்ளது எனவும், அணிசேரா கொள்கையில் இருந்து தற்போது கூட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசுகையில் இந்திய சீன எல்லை பிரச்சினையின் போது அமெரிக்கா இந்தியாவுக்கு தேவையான தகவல்கள் மற்றும் தளவாடங்களை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வருங்காலத்தில் இந்தியா க்வாட் அமைப்பில் தனது பங்களிப்பை அதிகபடுத்தும் எனவும் அவர் கூறினார்.