
அமெரிக்கா தனது எஃப்35 ஸ்டெல்த் போர் விமானத்தை எஸ்400 கண்டுபிடிக்க கூடும் என அஞ்சுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாகவே இந்த வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதை அமெரிக்கா தடுக்க நினைப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு ஆதாரமாக எஸ்400 மிக வேகமான ரேடார் அமைப்புகளை கொண்டு திறம்பட ஸ்டெல்த் விமானங்களை அடையாளம் காணும் திறன்.கொண்டது என சொல்லப்படுகிறது.
மேலும் துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதை மிக தீவிரமாக எதிர்க்கிறது.
துருக்கி மீது ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்த நிலையில் தற்போது இந்தியாவும் அத்தகைய நிலையை சந்திக்க கூடும் என எச்சரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.