அனைத்து காலாட்படை பட்டாலியன்களும் பெற உள்ள அமெரிக்க துப்பாக்கிகள் !!

இந்திய ராணுவம் சிக்716 மற்றும் ஏகே203 ஆகிய அதிநவீன துப்பாக்கிகளை படையில் இணைக்க உள்ளது.

இவற்றில் சிக்716 ஏற்கனவே படையில் இணைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அனைத்து காலாட்படை பட்டாலியன்களும் இந்த துப்பாக்கிகளை பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தில் சுமார் 400 காலாட்படை பட்டாலியன்கள் உள்ளன, ஒவ்வொரு பட்டாலியனிலும் இரண்டு கம்பெனியாவது இந்த துப்பாக்கிகளை பெற உள்ளன.

இந்த கம்பெனிகள் முன்னனி பகுதியில் இருந்தாலும் சரி அல்லது அமைதி பகுதிகளில் இருந்தாலும் சரி இவை இந்த துப்பாக்கிகளை பெறும் என கூறப்படுகிறது.

நமது இன்சாஸ் துப்பாக்கிகள் இந்த கம்பெனிகளில் இருந்து மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.