இந்திய ராணுவம் சுமார் 16000 நெகேவ் இலகுரக இயந்திர துப்பாக்கிகளை வாங்க இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்தது.
அதில் சுமார் 6000 துப்பாக்கிகள் இந்தியா வந்தடைந்த நிலையில் அவை ஏற்றுகொள்ளுதல் நிலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டன.
தற்போது இந்த சோதனைகள் முடிவு அடைந்த நிலையில் வடக்கு பிராந்திய கட்டளையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இனி பாகிஸ்தான் மற்றும் சீன உடனான எல்லை கட்டுபாட்டு பகுதிகளில் இந்த அதிநவீன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும் இன்னும் அதிக அளவில் இந்த துப்பாக்கிகளை மேக் இன் இந்தியா திட்டம் வழியாக வாங்க ராணுவம் விரும்புவது குறிப்பிடத்தக்கது