
2014ம் ஆண்டு முதல் முப்படைகளை சேர்ந்த 800 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.மன அழுத்தமே பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.எனவே தற்போது உள்ளதை விட சிறந்த தடுப்பு நடவடிக்கைகள் விரைவில் நமக்கு தேவையாக உள்ளது.
இராணுவத்தில் மட்டும் 2014 முதல் 591 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.விமானப்படையை சேர்ந்த 160 வீரர்களும் மற்றும் கடற்படையை சேர்ந்த 36 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு படைகள் இது போன்ற மன அழுத்த மரணங்களை குறைக்க பல்வேறு நடைமுறைகளை எடுத்து வருகின்றன எனினும் மேலும் பல்வேறு நடவடிக்கைகள் தேவையாகவே உள்ளன.வருடத்திற்கு சராசரியாக 100 வீரர்கள் என கடந்த பத்து வருடங்களாகவே இது நடந்து வருகிறது வருந்தத்தக்க செய்தி ஆகும்.
சீன மற்றும் பாக் எல்லையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் தொலை தூர பகுதிகளில் பணிபுரியும் வீரர்கள் இது போன்ற மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பாராளுமன்றத்தில் கூறியுள்ளது.