நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய இந்திய தரைப்படை ஆட்சேர்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இதற்கான எழுத்து தேர்வு நடைபெற இருந்த நிலையில்,
வினாத்தாள் வெளியானது கண்டுபிடிக்க பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனையடுத்து இதில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 2 முன்னாள் வீரர்கள், 2 இன்னாள் வீரர்கள் அடக்கம், இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக புனே காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.