தரைப்படைக்கு சுமார் 4,900 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் !!

  • Tamil Defense
  • March 20, 2021
  • Comments Off on தரைப்படைக்கு சுமார் 4,900 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் !!

இந்திய தரைப்படைக்கு சுமார் 4,960 மிலான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்தால் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது, இதன் மதிப்பு சுமார் 1188 கோடி ஆகும்.

இந்த மிலான் 2டி ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் அடுத்த மூன்று வருடங்களுக்கு உள்ளாக படையில் இணைக்கப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏவுகணைகளை நிலையான ஒரு இடத்தில் இருந்தோ அல்லது நகரும் வாகனத்தில் இருந்து எதிரி இலக்குகளை நோக்கி ஏவ முடியும்,

மேலும் இந்த ஏவுகணைகள் ஏறத்தாழ 2 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்டவை தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கு ஏற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணைகள் உண்மையிலேயே ஃபிரெஞ்சு எம்.பி.டி.ஏ நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும் அவற்றை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் நம் நாட்டில் தயாரித்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.