
இராணுவத்திற்கான கனரக ஆயுத தேவையை பூர்த்தி செய்ய சுமார் 400 HMV ட்ரக்குகள் தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆர்டரை BEML லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது.பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் இந்த வாகனங்களை தயாரித்து இந்திய இராணுவத்திற்கு வழங்கும்.
விரைந்து செல்லும் திறனுடைய ( High Mobility ) இந்த வாகனங்கள் சுமார் 758 கோடிகள் செலவில் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீரர்களை வேகமாக நகர்த்திச் செல்லவும் மற்றும் சாதாரண போக்குவரத்திற்காகவும் இந்த வாகனங்கள் உபயோகப்படும்.