
இந்தியா தயாரித்துள்ள மூன்றாவது நேத்ரா பறக்கும் ரேடார் விமானத்தை விமானப்படைக்கு மாற்ற உள்ளது டிஆர்டிஓ.
இந்த நேத்ரா விமானத்தை Technology demonstrator-ஆக டிஆர்டிஓ உபயோகித்து வருகிறது.இதை விமானப்படை விமானிகள் தான் இயக்கி வந்தனர்.
தற்போது இந்த விமானத்தை டிஆர்டிஓ விமானப்படைக்கு அதிகாரப்பூர்வமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இரு நேத்ரா விமானங்கள் விமானப்படையில் செயல்பாட்டில் உள்ளன.இந்த நேத்ரா விமானம் பிரேசிலின் எம்பரேயர் விமானத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டது ஆகும்.
பாலக்கோட் தாக்குதலின் போது இந்த விமானத்தை விமானப்படை உபயோகித்தது குறிப்பிடத்தக்கது.