Breaking News

Day: March 28, 2021

S-400 F-35 விமானத்தை கண்டுபிடிக்கும் என அஞ்சுகிறதா அமெரிக்கா !!

March 28, 2021

அமெரிக்கா தனது எஃப்35 ஸ்டெல்த் போர் விமானத்தை எஸ்400 கண்டுபிடிக்க கூடும் என அஞ்சுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாகவே இந்த வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதை அமெரிக்கா தடுக்க நினைப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக எஸ்400 மிக வேகமான ரேடார் அமைப்புகளை கொண்டு திறம்பட ஸ்டெல்த் விமானங்களை அடையாளம் காணும் திறன்.கொண்டது என சொல்லப்படுகிறது. மேலும் துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதை மிக தீவிரமாக எதிர்க்கிறது. […]

Read More

2 வருடங்களில் அதிகரித்துள்ள இந்திய விண்வெளி ராணுவ திறன் !!

March 28, 2021

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா மிஷன் ஷக்தி என்ற பெயரில் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்தது. இதற்கு அடுத்த காலகட்டங்களில் இந்தியா தனது விண்வெளி ராணுவ திறன்களை கணிசமான அளவில் வளர்த்து கொண்டுள்ளது. இந்த பணிக்காக விண்வெளி பாதுகாப்பு முகமை என்ற அமைப்பும் அதன் ஒரு பிரிவாக விண்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சி முகமை ஆகியவை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. சமிக்ஞை உளவு, மின்னனு உளவு மற்றும் […]

Read More

கடற்படை கப்பலில் விஞ்ஞானி மரணம் !!

March 28, 2021

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் நீர்மூழ்கி கப்பல்களின் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. அப்போது அதில் பணியாற்றி வந்த ரஷ்ய விஞ்ஞானி க்ராசேவ் டிமித்ரி சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டார். உடனடியாக இந்திய கடற்படை மருத்துவமனையான அஸ்வினிக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இந்திய கடற்படை சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

F4 ரக ரஃபேல்களை விற்க ஃபிரான்ஸ் விருப்பம் !!

March 28, 2021

இந்தியாவிற்கு F4 ரக ரஃபேல் விமானங்கள் மற்றும் அடுத்த தலைமுறை மைக்கா ஏவுகணைகளை விற்க ஃபிரான்ஸ் முயன்று வருகிறது. அடுத்த மாதம் 20-22 ஆகிய நாட்களில் ஃபிரான்ஸ் நாட்டிற்கு சுற்று பயணமாக செல்ல உள்ளார், அப்போது ஃபிரான்ஸ் குழுவினர் அவரிடம் இதுகுறித்து பேச உள்ளனர். எஃப்4 ரக ரஃபேல் விமானங்களில் அதிநவீன ரேடார், சென்சார், ஆப்ட்ரானிக்ஸ் அமைப்புகள் மற்றும் அடுத்த தலைமுறை மைக்கா ஏவுகணைகள், 1000 கிலோ எடையிலான தரை தாக்குதல் ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ள […]

Read More

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் முன் போர் பயிற்சி !!

March 28, 2021

இந்தியா வந்துள்ள தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஸூஹ் வூக் இன்று ஆக்ரா ராணுவ தளத்திற்கு சென்றார். அங்கு அவர் முன் இந்திய தரைப்படையின் பாராசூட் படை வீரர்கள் போர் பயிற்சி செய்தனர். ஒரு முழு பட்டாலியன் அளவிலான வீரர்கள் விமானங்களில் இருந்து குதித்து போரில் செயல்படுவதை தத்ரூபமாக நடித்து காட்டினர். தென்கொரிய அமைச்சருடன் இந்திய கடற்படைக்கான கண்ணிவெடி போர்முறை கப்பல்கள் குறித்தும் மேலதிக கே9 வஜ்ரா பிரங்கி அமைப்புகளை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது […]

Read More