Day: March 26, 2021

இந்திய விமானப்படையில் விமானிகள் பற்றாக்குறை !!

March 26, 2021

இந்திய விமானப்படையில் சுமார் 405 விமானிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பாதுகாப்பு இணை அமைச்சர் ஶ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இவர் பதில அளிக்கும் போது இதனை தெரிவித்தார். மேலும் பேசுகையில் விமானப்படையின் தேவை 4239 விமானிகள் ஆவர் ஆனால் தற்போது 3834 விமானிகள் மட்டுமே உள்ளதாக கூறினார். மேலும் 260 விமானங்கள் விமானிகளை பயிற்றுவிக்க பயன்படுத்தி வரப்படுவதாகவும் அந்த பணிகளுக்கு பிலாட்டஸ் பிசி-7, கிரண் மார்க்-1 மற்றும் ஹாவ்க் மார்க்-132 அதிநவீன ஜெட் பயிற்சி […]

Read More

அடுத்த வாரம் இந்தியா வரும் 3 ரஃபேல் விமானங்கள் !!

March 26, 2021

அடுத்த வாரம் ஃபிரான்ஸில் இருந்து இந்தியாவுக்கு மூன்று ரஃபேல் விமானங்கள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஏப்ரல் மாதம் 9 ரஃபேல் போர் விமானங்கள் வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த மாதத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹஷிமாரா படைத்தளத்தில் இருந்து ரஃபேல் விமானங்கள் இயங்க உள்ளன; இந்த படைத்தளத்தில் இருந்து தான் இரண்டாவது ரஃபேல் படையணி செயல்பட உள்ளது மேலும் இது சீன எல்லையோரம் செயல்படும் என்பது கூடுதல் சிறப்பு. […]

Read More

புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை !!

March 26, 2021

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் பகுதியில் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை விமானப்படை மற்றும் தரைப்படை ஆகியவை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்திய தரைப்படையின் பிரங்கி படை இதன் மூலமாக கூடுதல் வலுப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 40 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்ட இந்த ஏவுகணை நவீன வழிகாட்டி அமைப்பு மூலமாக வான் இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது. இந்த சோதனை ஒரு ட்ரக்கில் […]

Read More

பாதுகாப்பு துறையில் 250 புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டம் !!

March 26, 2021

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறை அதிக நம்பிக்கை அளிப்பதாக உள்ளது, 2030ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு துறையின் மதிப்பு சுமார் 70 பில்லியன் டாலர்கள் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இதனை உறுதிபடுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 250 புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டம் வகுத்துள்ளது. ஏற்கனவே சுமார் 194 புதிய நிறுவனங்கள் பாதுகாப்பு துறையில் இயங்கி வருகின்றன அவை பல அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி […]

Read More

இந்திய விண்வெளி வீரர்களின் பயிற்சி நிறைவு !!

March 26, 2021

அடுத்த வருடம் இந்தியா மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் பிரமாண்ட திட்டத்தை நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செயல்படுத்த உள்ளது. இதற்காக இந்திய விமானப்படையின் போர் விமானிகள் நால்வர் பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து இவர்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியா மற்றும் ரஷ்யா இடையே கடந்த 2019ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. தற்போது இவர்களின் பயிற்சி நிறைவு பெற்றதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ராஸ்காஸ்மோஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான […]

Read More

சமீபத்தில் முப்படைகளில் இணைந்த தளவாடங்கள் மற்றும் வானூர்திகள் லிஸ்ட்!!

March 26, 2021

இந்திய ராணுவ படைகளில் சமீபத்தில் பல்வேறு புதிய தளவாடங்கள் மற்றும் வானூர்திகள் இணைந்தன அவற்றை படைவாரியாக பார்க்லாம். இந்திய தரைப்படை;1) சீட்டல் ஹெலிகாப்டர்கள்2)அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் (மார்க் 0/1/2/3 வரையிலானவை)3) ஒருங்கிணைந்த ஆயுத அமைப்பு4) 4.20 மில்லிமீட்டர் சுழல் துப்பாக்கி.5) 5.70 மில்லிமீட்டர் சுழல் துப்பாக்கி இந்திய கடற்படை;1) டோர்னியர் 228 ரக வானூர்தி2) அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் (மார்க்3)3) சேட்டக் ஹெலிகாப்டர்4)பி8ஐ நீர்மூழ்கி வேட்டை விமானங்கள். இந்திய விமானப்படை;1)ரஃபேல் போர் விமானங்கள்2) இலகுரக தேஜாஸ் போர் […]

Read More

சியாச்சினுக்கு செல்லும் காயமடைந்த வீரர்கள் !!

March 26, 2021

சியாச்சின் பனிமலை முகடுகளை சில காலம் முன்னர் சுற்றுலா பயணிகளுக்கு அரசு திறந்து விட்டது. இதனையடுத்து தற்போது தேசப்பணியில் காயமடைந்து முடங்கிய வீரர்கள் சியாச்சினுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான முயற்சிகள் இந்திய சிறப்பு படைகளில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற வீரர்கள் நடத்தும் க்ளாவ் என்கிற அமைப்பு முன்னெடுத்தது. இதன் நிறுவனர் மற்றும் தலைவர் முன்னாள் பாரா சிறப்பு படை அதிகாரியான மேஜர் விவேக் ஜேக்கப் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ப்ராஜெக்ட்-18 மெகா போர்க்கப்பல் கட்ட இந்தியா முடிவு !!

March 26, 2021

இந்தியா சமீபத்தில் ப்ராஜெக்ட்18 என்ற பெயரில் மெகா போர்க்கப்பல்களை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன கடற்படை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, இந்திய பெருங்கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல்களில் தனது சக்தியை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கப்பல்களை கட்டி வருகிறது. அந்த வகையில் சுமார் 12,000 டன்கள் எடை கொண்ட டைப்055 ரக நாசகாரி கப்பல்களை படையில் இணைத்து வருகிறது, மேலும் இத்தகைய 18 கப்பல்களை படையில் இணைக்க உள்ளது. இந்த வகை கப்பல்கள் […]

Read More