Day: March 25, 2021

விபத்தில் மூன்று ராணுவ வீரர்கள் மரணம் !!

March 25, 2021

ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் பகுதியில் நடைபெற்ற போர் பயிற்சி ஒன்றில் கலந்து கொண்ட 7 ராணுவ வீரர்கள், இரவு தங்களது ராணுவ முகாம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது கங்காநகர் பகுதி அருகே வாகனம் கட்டுபாட்டை இழந்தது. அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்த வாகனம் தீப்பற்றி கொண்டது இதில் சுயநினைவு இழந்த மூன்று வீரர்கள் தீயில் சிக்கி இறந்தனர். மேலும் நால்வர் தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ரஜியாசர் பகுதி காவல்துறை […]

Read More

கடலோர காவல்படையில் புதிய கப்பல் இணைப்பு !!

March 25, 2021

நேற்று இந்திய கடலோர காவல்படையில் ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா என்கிற புதிய கடலோர ரோந்து கலன் இணைக்கப்பட்டது. இந்த கப்பல் சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி கப்பல் கட்டுமான தளத்தில் லார்சன் அன்ட் டுப்ரோ நிறுவனத்தால் கட்டபட்டதாகும். இந்த கப்பலில் ஒர் 30மில்லிமீட்டர் பிரங்கி மற்றும் ரிமோட் மூலமாக இயக்கப்படும் இரண்டு 12.7 மில்லிமீட்டர் கனரக இயந்திர துப்பாக்கிகள் உள்ளன. இந்த கப்பல் கடலோர பாதுகாப்பு ரோந்து, பேரிடர் மேலாண்மை, தேடுதல் மற்றும் மீட்பு, தீயணைப்பு போன்ற பணிகளை […]

Read More

LoC முதல் மியான்மர் எல்லை வரை; எல்லைக் காவல் பணியில் பெண் வீரர்கள்

March 25, 2021

ஏகே-47 துப்பாக்கி மற்றும் போர் தளவாடங்களோடு மியான்மர் எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார் ரைபிள்விமன் ஜக்ரிதி..கடினமான பாதை ,ஆற்றுப்பகுதி என கடினம் நிறைந்த பாதைகளில் தனது அன்றாட ரோந்து பணிகளை மேற்கொள்கிறார்.மியான்மரில் இராணவ புரட்சி நடந்து மக்கள் இந்தியா நோக்கி வரும் இன்னேரத்தில் அவரது இந்த ரோந்து பணி நடைபெற்று வருகிறது. எல்லை காவல் பணிகள் ஆகட்டும்,போதைப்பொருள் தடுப்பு பணிகள் ஆகட்டும் அல்லது காஷ்மீரில் இராணுவத்திற்கு உதவிகரமாக செயல்படும் பணிகள் ஆகட்டும் அஸ்ஸாம் ரைபிள்சின் ரைபிள் […]

Read More

நக்சல்கள் தாக்குதலில் ஐந்து வீரர்கள் வீரமரணம்

March 25, 2021

சத்திஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் வீரர்கள் பயணித்த பேருந்தை கண்ணிவெடி மூலம் தாக்கியதில் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.13 வீரர்கள் காயமடைந்துள்ளனர். நாராயண்பூரில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சத்திஸ்கரின் மாவட்ட ரிசர்வ் கார்டு படையின் மீது தான் இந்த கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஐந்து வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்த வீரர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.விமானப்படைக்கு சொந்தமான வானூர்திகள் மூலம் ராய்ப்பூர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தலைமை காவலர்கள் பவன் மந்தாவி மற்றும் ஜய்லால் […]

Read More

துருக்கிக்கு எதிராக இலவசமாக கிரீசிற்கு போர்க்ப்பல்கள் வழங்கும் பிரான்ஸ்

March 25, 2021

கீரிஸ் நாட்டிற்கு இலவசமாக கப்பல்களை வழங்கும் ஃபிரான்ஸ் !! கீரிஸ் கடற்படை புதிய போர்க்கப்பல்களை படையில் இணைக்க விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக டென்டர் விட்ட கீரிஸ் அதில் புதிய கப்பல்களை கட்டி தர விரும்பும் நாடு தான் ஏற்கனவே பயன்படுத்திய ஆனால் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உள்ள இரண்டு போர்க்கப்பல்களையும் தர வேண்டும் என நிபந்தனை வைத்திருந்தது. அதன் அடிப்படையில் ஃபிரான்ஸ் தனது கடற்படையில் உள்ள இரண்டு பழைய ஃப்ரிகேட் ரக கப்பல்களை வழங்க விருப்பம் […]

Read More

சீனாவுக்கெதிரான சக்தியாக இந்தியாவை நெருங்கும் பிலிப்பைன்ஸ்

March 25, 2021

பல்வேறு மட்டங்களில் நெருங்கும் இந்தியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் !! சமீப காலமாக இந்தியா மற்று ஃபிலிப்பைன்ஸ் இடையேயான நெருக்கம் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த நெருக்கமானது தூதரக அளவில் ஆரம்பித்து பாதுகாப்பு சுகாதாரம் வரை எட்டியுள்ளது. இந்தியாவிடம் இருந்து சமீபத்தில் பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க ஃபிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது, மேலதிக பிரம்மாஸ் அமைப்புகளை வாங்கும் அறிகுறிகளும் தெரிகிறது. இதனையடுத்து தற்போது சுகாதார துறையிலும் இந்தியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் இணைந்து செயல்பட உள்ளன. ஃபிலிப்பைன்ஸிற்கான இந்திய தூதர் […]

Read More