Day: March 23, 2021

12 இலகுரக ஹெலிகாப்டர்களின்தயாரிப்பு பணிகள் ஆரம்பம் !!

March 23, 2021

பெங்களூரில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இதற்கான உத்தரவாத கடிதத்தை பெற்றுள்ளது. இதனையடுத்து 12 இலகுரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணிகள் அங்கே துவங்கி உள்ளன. தரைப்படை மற்றும் விமானப்படைக்கு தலா 6 எனும் விகிதத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட உள்ளன. முதலாவது ஹெலிகாப்டர் அடுத்த வருடம் டெலிவரி செய்யப்படும், தும்கூரில் உள்ள தொழிற்சாலையில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

லடாக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய மிகப்பெரிய அளவில் திட்டங்கள் !!

March 23, 2021

லடாக் மாநிலத்தில் புதிதாக சுமார் 36 ஹெலிகாப்டர் தளங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவத்தின் போக்குவரத்து பலப்படும் சீனாவுடனான எல்லையில் இந்தியாவுக்கு இது பெரும் பலத்தை தரும். லடாக் யூனியன் பிரதேச ஆளுநர் திரு. மாத்தூர் இந்த பணிகள் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். லே மாவட்டத்தில் தெம்சாக், ஹான்லே, கர்னாக், கோர்சாக், சுமுர், டாங்க்ஸே, சூசூல், ஷயோக், ஸ்கிம்பட்டா, டிப்லிங், நெர்யாக்ஸ், கஞ்சி, மர்கா, பனாமிக், வாரிஸ், லார்க்யாப், […]

Read More

பாகிஸ்தான் இந்தியா இடையே ராணுவ பயிற்சி ??

March 23, 2021

இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள பன்னாட்டு ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவம் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாங்காய் கூட்டுறவு கவுன்சில் சார்பில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள நவ்ஷெரா மாவட்டத்தின் பப்பி பகுதியில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் இந்தியா, சீனா, ரஷ்யா பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ் குடியரசு மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கு பெற உள்ளன. இந்த கூட்டு பயிற்சிகள் பயங்கரவாத எதிர்ப்பு […]

Read More

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொத்து குண்டுகள் ஒரு பார்வை !!

March 23, 2021

இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாக அதிநவீன கொத்து குண்டுகளை தயாரித்து உள்ளது. சுமார் 1000 கிலோ எடையுடன் , 100 கிலோமீட்டர் தாக்குதல் வரம்புடனும், சிறிய இறக்கைகள் உடனும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் இரு வகைகள் உள்ளன அவையாவன; கருத்மா – இது இறக்கைகளை கொண்ட குண்டு ஆகும். இதன் தாக்குதல் வரம்பு சுமார் 100 கிலோமீட்டர். கருடா – இது இறக்கைகள் அற்ற மற்றொரு குண்டு ஆகும், இதன் தற்போதைய தாக்குதல் வரம்பு 30 கிலோமீட்டர் எதிர்காலத்தில் […]

Read More

அதிர்ச்சி அளிக்கும் வீரர்களின் தற்கொலை சம்பவங்கள்

March 23, 2021

2014ம் ஆண்டு முதல் முப்படைகளை சேர்ந்த 800 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.மன அழுத்தமே பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.எனவே தற்போது உள்ளதை விட சிறந்த தடுப்பு நடவடிக்கைகள் விரைவில் நமக்கு தேவையாக உள்ளது. இராணுவத்தில் மட்டும் 2014 முதல் 591 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.விமானப்படையை சேர்ந்த 160 வீரர்களும் மற்றும் கடற்படையை சேர்ந்த 36 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு படைகள் இது போன்ற மன அழுத்த […]

Read More