Breaking News

Day: March 15, 2021

ரகசிய தகவல்களை விடுவித்த ராணுவ வீரர் கைது !!

March 15, 2021

ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் மாவட்டத்தை சேர்ந்தவன் ஆகாஷ் மெரியா, இவனுக்கு 21 வயது ஆகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு இவன் ராணுவத்தில் இணைந்தான், 2019ஆம் ஆண்டு பயிற்சி முடித்த இவன் தற்போது சிக்கீம் மாநிலத்தில் பணியாற்றி வந்தான். இவன் முகநூல் வழியாக பாகிஸ்தான் உளவாளிகளுக்கு ரகசிய தகவல்களை விடுவித்ததை அறிந்த ராணுவம் நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் மாநில காவல்துறை இவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Read More

பாகிஸ்தான் ட்ரோனை விரட்டிய எல்லை பாதுகாப்பு படை !!

March 15, 2021

பஞ்சாப் மாநிலம் பனியால் பகுதியில் பாகிஸ்தான் எல்லையோரம் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இந்திய பகுதிக்குள் டின்டா காவல்சாவடி அருகே பாகிஸ்தான் ட்ரோன் நுழைந்தது. இதனை கண்டதும் எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளால் சுட ட்ரோன் திரும்பி சென்றது. பின்னர் ஏதேனும் பொருளை ட்ரோன் விட்டு சென்றதா என தேடுதல் நடத்தினர் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலமாக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களை கடத்த முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஜெய்ஸ் கமாண்டரை போட்டு தள்ளிய வீரர்கள்

March 15, 2021

முக்கிய ஜெய்ஸ் பயங்கரவாதியை இன்று நடைபெற்ற என்கௌன்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய பயங்கரவாதியாக சஜ்ஜாத் ஆப்கனி என்பவை் இன்று பாதுகாப்பு படை வீரர்கள் போட்டு தள்ளியுள்ளனர். காஷ்மீரின் சோபியானில் 14வது பட்டாலியன் சிஆர்பிஎப்,44 வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் காஷ்மீர் காவல் துறை வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேசனில் முக்கிய பயங்கரவாதியை வீழ்த்தியுள்ளனர். 13 மார்ச் 21 அன்று தொடங்கியது என்கௌன்டர்.மொத்தமாக இரு பயங்கரவாதிகள் இந்த என்கௌன்டரில் […]

Read More

வங்க கடலில் கூடும் க்வாட் கடற்படைகள் !!

March 15, 2021

அடுத்த மாதம் வங்க கடல் பகுதியில் க்வாட் அமைப்பின் கடற்படைகள் போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. மேலும் இந்த போர் பயிற்சிகளில் ஃபிரான்ஸ் நாட்டு கடற்படையும் பங்கேற்க உள்ளது. லா பெருஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சிகள் அடுத்த மாதம் ஏப்ரல் 4 – 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சிகளில் ஐந்து நாடுகளின் முன்னனி போர்க்கப்பல்கள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More