Day: March 13, 2021

ராணுவத்திற்கு தளவாடம் தயாரிக்கும் சென்னை பொறியியல் கல்லூரி !!

March 13, 2021

சென்னை காலவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது SSN பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரி போராசிரியை முனைவர். கவிதா தலைமையிலான மாணவர்கள் குழு நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒரு கூட்டு திட்டத்தில் உள்ளது. இதன்படி EXOSKELETON எனப்படும் அமைப்பை இணைந்து தயாரிக்க உள்ளனர்.

Read More

பாகிஸ்தானுக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விற்க துருக்கிக்கு தடை விதித்த அமெரிக்கா !!

March 13, 2021

துருக்கி அகஸ்டா ஏ129 ஹெலிகாப்டரை அடிப்படையாக கொண்ட ஏடாக்-129 எனும் தாக்குதல் ஹெலிகாப்டரை தயாரித்து பயன்படுத்தி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு இத்தகைய 30 தாக்குதல் ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானிற்கு விற்க துருக்கி ஒப்பந்தம் செய்தது. சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் துருக்கியின் ஏற்றுமதி வரலாற்றிலேயே மிகப்பெரியதாகும். ஆனால் துருக்கி ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 வாங்க முடிவு செய்ததையடுத்து அமெரிக்காவுடனான உறவு மோசமடைந்தது. மேற்குறிப்பிட்ட ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் என்ஜின் அமெரிக்க தயாரிப்பு ஆகும். […]

Read More

சீனாவின் கனிமவள ஏற்றுமதி பிடியை தளர்த்த க்வாட் திட்டம் !!

March 13, 2021

தற்போது உலகின் மிகப்பெரிய கனிமவள உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக சீனா உள்ளது. தற்போதைய நிலையில் சீனா உலக கனிமவள வர்த்தகத்தில் சுமார் 60% அளவுக்கு பங்கு வகிக்கிறது, இதன் காரணமாக ஸ்மார்ட்ஃபோன்கள் முதலாக பல கருவிகளை உற்பத்தி செய்ய சீனாவை நம்ப வேண்டிய நிலை உள்ளது. இதனை மாற்ற க்வாட் அமைப்பு புதிய கனிமவள உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அமைப்பை உருவாக்க திட்டமிட்டு உள்ளன மேலும் கனிமவள வர்த்தகம் சார்ந்த உலகளாவிய விதிகளை மாற்றி அமைக்கவும் உள்ளனர். […]

Read More

முதலாவது க்வாட் தலைவர்கள் மாநாடு இனிதே நிறைவு பெற்றது !!

March 13, 2021

நேற்று மாலை முதலாவது க்வாட் தலைவர்கள் மாநாடு இணையம் வழியாக நடைபெற்றது, இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சூகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட மோரிசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அதற்கான சவால்கள் குறித்த விஷயங்கள் பேசப்பட்டது. மேலும் மியான்மர் ராணுவ ஆட்சி குறித்த பேச்சும் எழுந்தது, மியான்மர் ராணுவ ஆட்சிக்கு பின்னால் சீனா இருப்பதாக கூறப்படுகிறது […]

Read More

விரைவில் செயல்பாட்டுக்கு வரும் 2ஆவது ரஃபேல் படையணி !!

March 13, 2021

இந்திய விமானப்படை தனது போர் விமான படையணிகளை புதிய விமானங்களை கொண்டு உயிர்ப்பித்து வருகிறது. அந்த வகையில் முதலாவது ரஃபேல் படையணி ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் செயலில் உள்ளது. தற்போது இரண்டாவது ரஃபேல் படையணியும் மேற்கு வங்க மாநிலம் ஹசிமாரா படை தளத்தில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மே மாதம் ரஃபேல் விமானங்கள் இந்த படைதளத்திற்கு செல்ல உள்ளன , ஏப்ரல் மாதம் படையணி செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் இதே காலகட்டத்தில் […]

Read More

நிலாவில் ஆராய்ச்சி நிலையம் கட்ட ரஷ்யா சீனா திட்டம் !!

March 13, 2021

ரஷ்ய மற்றும் சீன விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளான ராஸ்காஸ்மோஸ் மற்றும் தேசிய விண்வெளி மேலாண்மை அமைப்பு ஆகியவை இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன. இரு நாடுகளும் இணைந்து உருவாக்கும் இந்த ஆராய்ச்சி மையத்தை மற்ற நாடுகளும் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையமானது நிலவின் தரைப்பரப்பு அல்லது நிலவின் சுற்றுவட்ட பாதையில் கட்டமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகளுக்கான திட்டங்களை இரு நாடுகளும் பகிர்ந்து மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய டேங்கர் விமானங்களை பெற உள்ளதா இந்தியா? புதிய தகவல்கள்

March 13, 2021

இந்தியாவுக்கு டேங்கர் விமானங்களை வழங்க போயிங் விருப்பம் !! இந்திய விமானப்படைக்கு நீண்ட காலமாகவே டேங்கர் விமானங்களை வாங்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. பலமுறை விமானங்களை தேர்வு செய்த போதிலும் நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமல் போகும் போக்கு நிலவி வருகிறது. இதனையடுத்து இந்திய விமானப்படை குத்ததை அடிப்படையில் இவ்வகை விமானங்களை பெற முயற்சிக்கிறது, இதற்கான போட்டியில் ஏர்பஸ் நிறுவனம் உள்ளது. தற்போது போயிங் நிறுவனமும் குத்தகை அடிப்படையில் தனது கேசி46 […]

Read More

ரஃபேல் படையணியின் கட்டளை அதிகாரி பணியிடமாற்றம்; காரணம் என்ன ??

March 13, 2021

இந்திய விமானப்படையின் முதலாவது ரஃபேல் விமான படையணியின் கட்டளை அதிகாரி க்ருப் கேப்டன் ஹர்கிரத் சிங் ஆவார். தற்போது இவர் ஷில்லாங்கில் உள்ள கிழக்கு வான்படை கட்டளையக தலைமை அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அங்கு மேற்கு வங்க மாநிலம் ஹசிமாரா தளத்தில் இரண்டாவது ரஃபேல் படையணி செயல்பாட்டுக்கு வருவதை மேற்பார்வை செய்ய உள்ளார். இது வழக்கமான நடைமுறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More