Day: March 11, 2021

முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கபட்ட ஆயுதம் வெற்றிகரமாக சோதனை !!

March 11, 2021

நேற்று முன்தினம் இந்திய கடற்படைக்கு சொந்தமான இல்யூஷின்-38 நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை விமானத்தில் இருந்து அதிநவீன இலகுரக நீரடிகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த நீரடிகணையை கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த நீரடிகணை சிறப்பு வகையான பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து இலக்கை நோக்கி வீசப்பட்டது, இதற்கான பாராசூட்டை ஆக்ராவில் உள்ள ஏ.டி.ஆர்.டி.இ அமைப்பு வடிவமைத்து உள்ளது. பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் இந்திய கடற்படையின் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்பார்வை செய்தனர். […]

Read More

இந்தியாவுடன் இரண்டாவது பிரம்மாஸ் ஒப்பந்தம் செய்யுமா ஃபிலிப்பைன்ஸ் ??

March 11, 2021

ஏற்கனவே ஃபிலிப்பைன்ஸ் தரைப்படைக்கு பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தற்போது ஃபிலிப்பைன்ஸ் கடற்படை பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்து உள்ளது. ஃபிலிப்பைன்ஸ் கடற்படை தளபதி அட்மிரல் ஜியோவான்னி கார்லோ பகார்டோ சமீபத்தில் அந்நாட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஃபிலிப்பைன்ஸ் கடற்படையின் தேர்வு குழு பிரம்மாஸ் மிகச்சிறந்த கடற்கரையோர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையாக அமையும் என தகவல் அளித்து உள்ளதாகவும், ஆகவே ஃபிலிப்பைன்ஸ் கடற்படை மாக்3 வேகத்தில் செல்லக்கூடிய பிரம்மாஸ் ஏவுகணைகளை படையில் […]

Read More

உலகின் இரண்டாவது பெரிய அணுசக்தி நாடாக மாற சீனா முயற்சி ?? அதிர்ச்சி தகவல் !!

March 11, 2021

அமெரிக்க செனட்டில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகள் செனட் கமிட்டி அந்நாட்டு தளபதிகளிடம் பல்வேறு வகையான கேள்விகளை முன்வைத்தது.அதில் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அமெரிக்க செனட்டர் டாம் காட்டன் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த கட்டளையகமான இந்தோ பசிஃபிக் கட்டளையகத்தின் தளபதியிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். சீனா இந்த பத்தாண்டுகளின் இறுதியில் (2030) அமெரிக்காவை விட பெரிய அணுசக்தி நாடாக மாறுமா ?? என்ற அந்த […]

Read More

காஷ்மீரின் அவந்திபோராவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு !!

March 11, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் பயங்கரவாத ஆதரவாளர்கள் பற்றிய ரகசிய தகவல் பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர், அவர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் கண்ணிவெடி கண்டுபிடிக்கபட்டது. இதனை கொண்டு புல்வாமா தாக்குதலை போன்று மிகப்பெரிய தாக்குதலை பாதுகாப்பு படைகள் மீது நடத்த திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. தகுந்த நேரத்தில் எடுக்கபட்ட விரைவான நடவடிக்கையால் மிகப்பெரிய […]

Read More

க்வாட் அமைப்பின் தலைவர்கள் முதல்முறையாக சிறப்பு ஆலோசனை !!

March 11, 2021

சீனாவின் அச்சுறுத்தல் உலகளாவிய ரீதியில் பலத்த எதிர்வினைகளை அந்நாட்டிற்கு எதிராக ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து சீனாவை கட்டுபடுத்தும் நோக்கில் க்வாட் எனப்படும் மிகப்பெரிய மிக சக்திவாய்ந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் அமெரிக்கா இந்தியா ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது இந்நாடுகளின் தலைவர்கள் முதல்முறையாக ஆலோசனை நடத்த உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இணையம் வாயிலாக வருகிற மார்ச் 12ஆம் தேதி இவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய […]

Read More

நவீனத்துவம் மிக்கதாக இந்திய ராணுவம் மாற வேண்டும் பிரதமர் மோடி பேச்சு !!

March 11, 2021

குஜராத் மாநிலம் கேவாடியாவில் முப்படை தளபதிகள் ஆலோசனை மாநாடு நடைபெற்று வருகிறது, இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது காலத்திற்கேற்ப இந்திய ராணுவம் நவீனத்துவம் நிறைந்ததாக மாற வேண்டும் எனவும் தேவையற்ற விஷயங்களை அகற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார். இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி கூட்டுப்படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பிரதமருக்கு விளக்கினார். மேலும் பிரதமர் பேசுகையில் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு தேவை அது […]

Read More