Day: March 5, 2021

இந்திய ராணுவம் இரு தரப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக வேண்டும் : ஜெனரல் பிபின் ராவத் !!

March 5, 2021

ஜெனரல் பிபின் ராவத் சமீபத்தில் செகந்திராபாத்தில் உள்ள ராணுவ மேலாண்மை கல்லூரியால் நடத்தப்பட்ட வெபினார் ஒன்றில் பேசினார். அப்போது உலகின் எந்த ராணுவங்களுக்கும் இல்லாத சவால் இந்திய ராணுவத்துக்கு உள்ளதாகவும் சீனா மற்றும் பாகிஸ்தானை ஒருசேர கையாள இந்திய ராணுவம் தயாராக வேண்டும் என கூறினார். மேலும் பேசுகையில் சுதந்திரம் அடைந்த போது இந்திய ராணுவம் மிகச்சிறிய ராணுவமாக இருந்தது ஆனால் தற்போது உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களில் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. போர்களை சந்திக்க தேவையான பயிற்சியும், […]

Read More

மொரிஷியஸில் சத்தமில்லாமல் இந்தியா உருவாக்கி வரும் படை தளம்: சிறப்பு கட்டுரை !!

March 5, 2021

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை மொரிஷியஸில் இந்தியா சத்தமில்லாமல் படை தளம் ஒன்றை கட்டி வருகிறது. மொரிஷியஸில் இருந்து 1,110 கிலோமீட்டர் தொலைவிலும், இந்தியாவின் தென்கோடியில் இருந்து 3,095 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அகலேகா தீவுகள். மொரிஷியஸ் நாட்டின் ஒரு பகுதியான இந்த தீவுகள் வடக்கு மற்றும் தெற்கு என இரு தீவுகளாக அமைந்துள்ளன, இந்த இரு தீவுகளிலும் 300 பேர் தான் வசிக்கிறார்கள், இவர்களின் வாழ்க்கை தரமும் உயர இந்தியா […]

Read More

இந்திய அமெரிக்க உறவு பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கருத்து

March 5, 2021

அமெரிக்கா இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மதிக்கிறது !! அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் தினசரி செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது இந்த வருடமும் 20பில்லியின் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் இதில் பல அதிநவீன தளவாடங்களும் அடக்கம் எனவும் அவர் கூறினார். மேலும் பேசுகையில் இந்த ஆயுத வர்த்தகம் இந்தியாவின் பாதுகாப்பு உரிமைகளையும், அதன் இறையாண்மையையும் அமெரிக்கா மதிப்பிதை காட்டுகிறது என்றார். இது எங்களது உலகளாவிய முலோபாய […]

Read More

கேவாடியாவில் துவங்கிய முப்படை தளபதிகள் மாநாடு, முதல் முறையாக பங்கேற்கும் பிரதமர் !!

March 5, 2021

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவாடியா நகரில் வருடாந்திர முப்படை தளபதிகள் மாநாடு இன்று துவங்கியது, இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கூட்டு படை தலைமை தளபதி மற்றும் முப்படை தலைமை தளபதிகள் கலந்து கொண்டனர். மேலும் முப்படைகளை சேர்ந்த பல்வேறு மட்டத்திலான பல்வேறு படை பிரிவுகளின் தளபதிகளும் பங்கேற்றனர். நாளை முதல் முறையாக பிரதமர் இந்த வருடாந்திர தளபதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முதல் முறையாக இடைநிலை […]

Read More