Breaking News

Day: March 4, 2021

இந்தியாவின் சூப்பர் சுகோய் திட்டத்திற்கு ரஷ்யா ஒப்புதல் ??

March 4, 2021

இந்தியா ஏறத்தாழ 200 சுகோய்30 போர் விமானங்களை அதிநவீன சூப்பர் சுகோய் ஆக தரம் உயர்த்த நினைக்கிறது. இதற்கு ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறியுள்ளது. நவீன ரேடார், ஏவியானிக்ஸ் அமைப்புகள் இதில் அடக்கம், ரஷ்ய உதவியின்றி இதனை செய்ய முடியும் என ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. ஆனால் இந்திய விமானப்படை சுகோய் விமானத்தின் முதன்மை தயாரிப்பாளர் எனும் முறையில் ரஷ்யாவின் […]

Read More

இறுதி கட்ட தயாரிப்பில் தென்கொரிய ஸ்டெல்த் போர் விமானம் !!

March 4, 2021

தென் கொரியா கடந்த சில ஆண்டுகளாக ஸ்டெல்த் போர் விமான தயாரிப்பில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் ஆறு சோதனை விமானங்கள் சச்சியோன் நகரில் அமைந்துள்ள கே.ஏ.ஐ நிறுவன தொழிற்சாலையில் இறுதிகட்ட தயாரிப்பு பணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் முதல் இந்த விமானங்களை பல்வேறு வகையான சோதனைகளில் ஈடுபடுத்த உள்ளனர், பின்னர் 2028ஆம் ஆண்டு முழு வீச்சில் தயாரிப்பு பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த விமானங்கள் தற்போது 4.5 தலைமுறை […]

Read More

தெப்ஸாங்கில் படையினரை குவிக்கும் சீனா !!

March 4, 2021

இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ள தவ்லத் பெக் ஒல்டி பகுதியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தியான்வென்டியான் எனும் சீன ராணுவ முகாமில் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. சமீபத்தில் வெளியான சில படங்களில் இந்த முகாமில் அதிக அளவில் ராணுவ வாகனங்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. 1962 போருக்கு பின்னர் சீனாவால் கட்டப்பட்ட இந்த தளம் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது, தற்போது அனைத்து காலநிலைகளிலும் இயங்கும் வகையில் இந்த தளம் உள்ளது. இந்த […]

Read More

உலகின் முதல் சூப்பர்சானிக் ட்ரோன் தயார் !!

March 4, 2021

தற்போதைய நவீன காலத்தில் மற்ற விஷயங்களை போல போர்முறைகளும் மாற்றம் கண்டு வருகின்றன, அதில் ட்ரோன் போர்முறை மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தற்போது அந்த ட்ரோன்களும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றன, அந்த வகையில் உலகின் முதல் சூப்பர்சானிக் ட்ரோன் தயாராகி உள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த கெல்லி ஏரோஸ்பேஸ் நிறுவனம் “ஆரோ” என பெயரிடப்பட்டுள்ள சூப்பர்சானிக் ட்ரோனை தயாரித்துள்ளது. இந்த ட்ரோன் 16 டன்கள் எடை கொண்டது, 2.1 மாக் வேகத்தில் அதாவது ஒலியை விட […]

Read More

ராணுவ எழுத்து தேர்வு முறைகேடு, 7 பேர் கைது !!

March 4, 2021

நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய இந்திய தரைப்படை ஆட்சேர்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இதற்கான எழுத்து தேர்வு நடைபெற இருந்த நிலையில், வினாத்தாள் வெளியானது கண்டுபிடிக்க பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து இதில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 2 முன்னாள் வீரர்கள், 2 இன்னாள் வீரர்கள் அடக்கம், இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக புனே காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

Read More

புதிய வெடிகுண்டு அமைப்பை உருவாக்கிய டி.ஆர்.டி.ஒ !!

March 4, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய வெடிகுண்டு அமைப்பை உருவாக்கி உள்ளது. பன்ட் ப்ளாஸ்டிங் டிவைஸ் (தடுப்பு அழிப்பான்) எனும் இந்த கருவி இதன் முந்தைய மார்க்1 ரகத்தில் இருந்து மார்க்2 ரகத்திற்கு தரம் உயர்த்தபட்டதாகும். இதற்கான சோதனைகளை தரைப்படையின் 120ஆவது பொறியாளர்கள் ரெஜிமென்ட் மேற்கொண்டது. போர்க்களத்தில் நமது ராணுவ வாகனங்களின் போக்குவரத்தை முடக்கும் வகையில் கட்டப்பட்ட தடுப்புகளை மிக குறைந்த நேரத்தில் அகற்ற இது உதவும். ஒரு ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்ட வெடிபொருள் […]

Read More

ஈரானின் புதிய ட்ரோன் அமெரிக்க காப்பியா ??

March 4, 2021

ஈரான் சமீபத்தில் “கமான்22” எனும் புதிய ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது, அதன் உருவ அமைப்பு அமெரிக்க “எம்.க்யூ9 ரீப்பர்” போல் உள்ளது. இந்த ட்ரோன் 300 கிலோ எடையிலான வெடிகுண்டுகளை சுமார் 3000கிமீ தொலைவுக்கு கொண்டு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா ட்ரோன் தாக்குதலில் ஈரானிய தளபதி சொலைமானியை கொன்றது, தற்போது ஈரானும் இதை போன்று அமெரிக்காவை பழிவாங்க காத்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

Read More