இனிதே முடிவடைந்த இந்தியா அமெரிக்கா இராணுவப் பயிற்சி
இந்திய அமெரிக்க வீரர்கள் கலந்து கொள்ளும் 16வது யுத்த அபயாஸ் போர்பயிற்சி பிப் 21 அன்று மகாஜன் பயிற்சி தளத்தில் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இரு நாட்டு இராணுவங்களில் இருந்தும் சுமார் 500 பேர் இந்த போர்பயிற்சியில் கலந்து கொண்டனர்.இரு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பு தன்மையை அதிகரிக்கும் பொருட்டு realistic field training exercise (FTX) உடன் complex command post exercise (CPX) ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
இந்த இறுதி விழா நிகழ்வில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் மைக்கேல் பெர்னான்டஸ் ,விசிஸ்ட் சேவா விருது ,24வது இன்பான்ட்ரி பிரிவு கமாண்டர் அவர்கள் கலந்து கொண்டனர்.அதே போல அமெரிக்க இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் சேவியர் புரன்சன்,கமாண்டர்,7வது இன்பான்ட்ரி டிவிசன் அவர்கள் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சார்பில் இந்த முறை 11வது ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் மற்றும் 170வது இன்பான்ட்ரி பிரிகேடின் கமாண்டர் பிரிகேடியர் முகேஷ் பன்வாலா தலைமையில் கமாண்ட் மற்றும் ஸ்டாப் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா சார்பில் 2-3 இன்பான்ட்ரி பட்டாலியன் மற்றும் கலோனல் ஜெரர்டு போடுவெல் தலைமையில் 1-2 ஸ்ட்ரைக்கர் கமாண்ட் குழு கலந்து கொண்டது.