பைடன் நிர்வாகம் பொறுப்பேற்ற பின் இந்தியா அமெரிக்கா இடையிலான முதல் போர் பயிற்சி !!

  • Tamil Defense
  • February 2, 2021
  • Comments Off on பைடன் நிர்வாகம் பொறுப்பேற்ற பின் இந்தியா அமெரிக்கா இடையிலான முதல் போர் பயிற்சி !!

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்ற பின்னர் இந்தியா அமெரிக்கா இடையிலான முதல் போர் பயிற்சி நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மஹாஜன் பயிற்சி களத்தில் யுத் அப்யாஸ் போர் பயிற்சி துவங்க உள்ளது.

இதில் இந்தியா சார்பில் ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரி மற்றும் அமெரிக்கா சார்பில் ஸ்ட்ரைக்கர் சண்டை படையணி ஆகியவை பங்கேற்க உள்ளன.

கவச வாகனங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை கொண்டு பாலைவனம் மற்றும் நகர்ப்புற பகுதிளில் சண்டையிடும் திறன்களை சோதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.