
விண்வெளி துறையில் கால்பதித்துள்ள இந்திய தனியார் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் உலகின் முதல் 3டி ப்ரின்டட் ராக்கெட் என்ஜினை சோதனை செய்துள்ளது.
இது ஒரு செமி க்ரயோஜினிக் என்ஜின் ஆகும், இரண்டு கட்டங்களை கொண்டது ஆகும்.
இந்த என்ஜின் 100கிலோ எடை கொண்ட பொருட்களை 700கிலோமீட்டர் உயரத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
முதல் கட்ட என்ஜினுக்கு அக்னிடைட் எனவும் இரண்டாம் கட்ட என்ஜினுக்கு அக்னிலெட் எனவும் பெயர் வைத்துள்ளனர்.
இரண்டு என்ஜின்களும் முறையே 25 மற்றும் 12 கிலோநியுட்டன் உந்துவிசையை வெளிபடுத்துகின்றன.