
சென்னை மங்கலாபுரம் இடையிலான ரயில் இன்று கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையம் வந்த போது ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது தமிழகத்தை சேர்ந்த ரமணி எனும் பெண் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த பைகளை சோதனை இட்டனர்.
அப்போது சுமார் 100 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 டெட்டனேட்டர்கள் இருந்தது கண்டுபிடிக்க பட்டது.
அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அவரை கைது செய்து, வெடி பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கிணறு தோண்டுவதற்காக இதனை கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார், இருந்தாலும் பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.