நீர்மூழ்கி எதிர்ப்பு திறனுடன் பலபணி வானூர்திகள் முன்னனி போர்க்கப்பல்களுக்கு முக்கிய கண்களாக பார்க்கப்படுகிறது.கடற்தரைப் பரப்புகளை கண்காணிக்க மற்றும் நீரடி பகுதிகளை சிறப்பாக கண்காணிக்கவும் இவை உதவுகின்றன.இந்தியாவிடம் தற்போது உள்ள பழைய Sea King வானூர்திகளுக்கு மாற்றாக சுமார் $2.6Bn டாலர்கள் செலவில்24 MH-60R Romeo வானூர்திகளை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து பெறகிறது.
இந்திய கடற்படையில் பல முக்கிய முன்னனி கப்பல்கள் ஒரு சிறந்த நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்தி இல்லாமல் ரோந்துக்கு செல்கின்றன.சீன கடற்படை இந்திய பெருங்கடலில் சுற்றி வரும் நிலையில் இது பெரும் ஆபத்தே.சொல்லப்போனால் நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகள் இல்லாமல் எதிரி நீர்மூழ்கிகளுக்கு நமது கப்பல் எளிதில் இலக்காகலாம்.சொல்லப்போனால் குருட்டுத் தனமாக தான் கடலில் இருக்க வேண்டும்.
தற்போது ரோமியோ வானூர்திகள் பெறப்பட உள்ளது.அவற்றின் திறன் சிலவற்றை காணலாம்.
MH-60 வானூர்தியில் Telephonics APS-153(V) ரேடார் மற்றும் மேலும் சிலவற்றுடன் வருகிறது.மேலும் high-resolution Inverse Synthetic Aperture Radar (ISAR) imaging option உள்ளது.இதன் மூலம் எதிரிகளை எளிதாக வகைப்படுத்தி காணலாம்.இரவானாலும் சரி.
இந்த ரேடாரில் Automatic Radar Periscope Detection and Discrimination திறனும் உள்ளது.
நீர்மூழ்கிகள் நீருக்குள் மூழ்கியிருக்கும் போது பெரிஸ்கோப் உதவியாக தான் கடற்தரைப் பரப்புகளை கண்காணிக்கும்.இப்படி பெரிஸ்கோப் வெளியே வருமானால் நமது வானூர்தியால் அதை கண்டுபிடிக்க முடியும்.பெரிஸ்கோப்பை கண்டறிவது என்பது எளிதான பணியல்ல.
MH-60R வானூர்தியில் AN/AQS-22 ஏர்போர்ன் குறை அதிர்வெண் சோனார் அமைப்பு உள்ளது.இது தான் முன்னனி கடலடி ASW sensor ஆகும்.
மேலும் வானூர்தியில் Advanced Precision Kill Weapon System (APKWS) laser-guided rocket உள்ளது.அதிதுல்லியமாக இலக்கை தாக்கியழிக்க இது உதவும்.
இது தவிர AGM-114 Hellfire air-to-surface ஏவுகணைகள், Kongsberg Naval Strike ஏவுகணை மற்றும் MK54 torpedoes ஆகியவையும் உள்ளன.