இருமுறை VL-SRSAM வெற்றிகரமாக சோதனை

டிஆர்டிஓ இன்று செங்குத்தாக செல்லக்கூடிய குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.செங்குத்தாக வைக்கப்பட்டிருந்த ஒரு லாஞ்சரில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை ஒடிசா கடலோர பகுதியில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

கடற்படைக்காக இந்த அமைப்பை டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ளது.வானிலிருந்து மிக குறுகிய தூரத்தில் வரக்கூடிய ஆபத்துக்கள் மற்றும் சீ ஸ்கிம்மிங் திறன் கொண்ட ஆபத்துகளுக்கு எதிராக இந்த ஏவுகணை அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இரு சோதனைகளின் போதும் இலக்கை மிகத்துல்லியமாக ஏவுகணை தாக்கியுள்ளது.இந்த ஏவுகணை அதிகபட்ட தூரம் மற்றும் குறை தூரம் என இரு முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.