பங்கோங் ஏரியில் சீனா கட்டிய வானூர்தி தளம்..! தற்போதைய நிலை என்ன?

பாங்காங் ஸோ ஏரி அருகே கட்டிய ஜெட்டி மற்றும் ஹெலிபேடை அகற்றும் சீனா !!

கிழக்கு லடாக்கில் ஒரு வருட காலமாக நடைபெற்று வந்த மோதல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்திய மற்றும் சீன ராணுவங்கள் தங்களது தளவாடங்கள் மற்றும் வீரர்களை விலக்கி கொள்ள தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் பாங்காங் ஸோ ஏரியின் வடக்கு கரை பகுதியில் ரோந்து படகுகளை நிறுத்த பயன்படும் ஜெட்டி மற்றும் ஒர் ஹெலிபேட் ஆகியவற்றை சீனா அகற்றி வருகிறது.

மேலும் சில துப்பாக்கி நிலையங்களையும் அகற்றி வருகிறது இவை அனைத்துமே கடந்த வருடம் சீனாவால் அத்துமீறி கட்டப்பட்டவை ஆகும்.