
மூன்று புது விமானங்களும் 2026க்குள் தனது முதல் பறப்பை மேற்கொள்ளும்.இதில் விமானப்படைக்கு இரு விமானங்களும் கடற்படைக்கு ஒரு விமானங்கள் என ஏடிஏ தலைவர் கிரிஷ் தியோதார் அவர்கள் கூறியுள்ளார்.
1983ம் வருடம் தொடங்கப்பட்ட தேஜஸ் மேம்பாடு அதன் மேம்பாட்டிற்கான பலனை கடந்த புதன் அன்று அடைந்தது.இந்தியா தற்போது 73 LCA Tejas Mk-1A மற்றும் 10 LCA Mk-1 வகை விமானங்களை 48000கோடிகள் ரூபாயில் பெற உள்ளது.இந்த தேஜஸ் மேம்பாட்டில் இந்திய அறிவியலாளர்கள் பல்வேறு படிப்பினைகளை பெற்றுள்ளனர்.இதன் உதவியுடன் தற்போது மேலும் மூன்று புதிய விமானங்களை மேம்படுத்தி வருகின்றனர்.
2023ன் இறுதிக்குள் தேஜஸ் விமானத்தின் மார்க் 2 ரகம் வெளிவரும்.மார்க்-1ஐ விட அதிநவீனமான இந்த மார்க் 2 வரும்.மார்க் 1 மற்றும் 1ஏ ரகங்கள் மிக்-21க்கு மாற்றாக படையில் இணைக்கப்படும் வேளையில் மார்க்-2 ரகம் மிராஜ் மற்றும் ஜாகுவார் ரக விமானங்களும் மாற்றாக படையில் இணைக்கப்படும்.
தேஜஸ் மார்க் 2 நான்காம் தலைமுறை விமானமாக இருக்கும் நிலையில் தற்போது மேம்பாட்டில் உள்ள ஏஎம்சிஏ ஐந்தாம் தலைமுறை விமானம் ஆகும்.2010ல் இதற்கான மேம்பாட்டு பணிகள் தொடங்கின.
ஏஎம்சிஏ விமானம் தனது வயிற்றறைக்குள் ஆயுதங்களை மறைத்து எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது.சிறந்த மேனுவர் செய்யும் ஆற்றல் கொண்டது.ரேடார் கண்ணில் அகப்படாதவாறு மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது.
விதவிதமான மோடுகளை பொறுத்து 1000 முதல் 3000கிமீ வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.ஏஎம்சிஏ தொடர்பான வடிவமைப்பு பணிகள் முடிந்துவிட்டன.முதல் மாதிரி விமானம் 2024ம் ஆண்டு தயாராகும்.மற்றும் முதல் பறப்பு 2026க்குள் நடைபெறும்.
AMCA Mk-1 விமானம் முதலில் இறக்குமதி செய்யப்பட்ட என்ஜின் பெற்றிருக்கும்.மேலும் AMCA Mk-2 சொந்த தயாரிப்பு என்ஜின் பெற்றிருக்கும்.
முதல் இரு ஸ்குவாட்ரான்கள் AMCA Mk-1 வெளிநாட்டு தயாரிப்பு என்ஜின் பெற்றிருக்கும். Mk-2 ரகம் சொந்த தயாரிப்பு என்ஜின் பெற்றிருக்கும்.இந்த மார்க்-2 ரகத்தை தான் விமானப்படை அதிகமாக படையில் இணைக்க உள்ளது.
மூன்றாவது புதிய விமானம் கடற்படைக்கான இரட்டை என்ஜின் கொண்ட Twin-Engine Deck-Based Fighter (TEDBF) விமானம் ஆகும்.இதுவும் 2026ம் ஆண்டுக்குள் தனது முதல் பறப்பை மேற்கொள்ளும்.ஆனால் கப்பலில் இருந்து இயக்கப்படும் விமானத் தயாரிப்பு அவ்வளவு எளிதல்ல..இந்த விமானம் 2030 வாக்கில் தான் படையில் இணையும்.