
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவு “பாதுகாப்பு ஏவியானிக்ஸ் ஆராய்ச்சி அமைப்பு” ஆகும்.
இதன் விஞ்ஞானிகள் சில ஆண்டுகளாக நமது சு30 போர் விமானங்களுக்கான இரண்டு புதிய பாட் அமைப்புகளை உருவாக்கி வந்தனர்.
டேர் டிசிமாவ்ஸ் (DARE DCMAWS):
இந்த அமைப்பில நான்கு எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார்கள் உள்ளன, இவை தாக்கு வரும் ஏவுகணைகள் குறித்த எச்சரிக்கையை அளிக்கும்.
ஜாம்மர்:
இந்த அமைப்பு கால்லியம் நைட்ரேட் ஏசா ரேடார் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது, இது தற்போது இந்திய விமானப்படையில் உள்ள அனைத்து வகையான ஜாம்மர்களை விடவும் நவீனமானது ஆகும்.