
ஒய்வு பெற்ற துருக்கி ராணுவ அதிகாரியான ப்ரிகேடியர் ஜெனரல் அட்னன் தனிர்வேதி சதாத் எனும் தனியார் பாதுகாப்பு கம்பெனியை துவங்கி நடத்தி வருகிறார்.
ரஷ்யாவின் வேக்னர், அமெரிக்காவின் ப்ளாக்வாட்டர் தற்போது அகாதெமி போன்ற கம்பெனிகள் அந்நாட்டு அரசுகளுக்காக உக்ரைன், ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சண்டையிட்டன.
அதே பாணியை இந்த சதாத் நிறுவனமும் கையாள்கிறது. அர்மீனியா, சிரியா போன்ற நாடுகளில் துருக்கிக்கு ஆதரவாக களம் இறங்கி சண்டையிட்டது.
தற்போது துருக்கி அதிபர் எர்டோகானின் விருப்பத்திற்கு இணங்க காஷ்மீருக்கு இந்த நிறுவனத்தின் வீரர்களை அனுப்ப உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதற்கு அமெரிக்கவாழ் காஷ்மீரியான சயத் குலாம் நபி ஃபாய் உதவி வருகிறார், பயங்கரவாத செயல்களுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக எஃப்.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டு தற்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
மேலும் இவர் உறுப்பினராக உள்ள அமெரிக்க காஷ்மீர் கவுன்சிலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ பெருமளவில் நிதி உதவி அளிப்பதாக எஃப்.பி.ஐ கருதுகிறது.
இவை அனைத்துமே துருக்கி தன்னை ஒரு மிகப்பெரிய சக்தியாக நிர்மானிக்க முயல்வதன் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.