
க்ரீஸ் விமானப்படை ரஃபேல் போர் விமானங்களை இயக்கி வருகிறது, இந்த விமானங்களில் ஸ்கால்ப், மிட்டியோர், மைகா, எக்ஸோசெட் போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தி கொள்ள முடியும்.
தற்போது 18 ரஃபேல் போர் விமானங்களை க்ரீஸ் இயக்கி வருகிறது, 2025 ஆண்டில் மேலும் ஒரு தொகுதி ரஃபேல் விமானங்களை படையில் இணைக்க உள்ளது இதன் காரணமாக 40 ரஃபேல் விமானங்கள் க்ரீஸ் படையில் இருக்கும்.
இந்த எண்ணிக்கை மற்றும் ரஃபேலின் அதிநவீன ஏசா ரேடார், அது தவிர மிட்டியோர் ஏவுகணைகள் மூலம் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் க்ரிஸ் விமானப்படை மிகப்பெரிய அளவில் வலுப்பெறும்.
இதனை கருத்தில் கொண்டு துருக்கி கவலைப்படுகிறது, அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர் விமானங்களுக்கான ஏவுகணைகளை படையில் இணைக்க வேண்டும் எனவும் துருக்கி பாதுகாப்பு வல்லுனர்கள் விரும்புகின்றனர்.
மேலும் துருக்கி எஃப்16 விமானங்கள் ரஃபேல் விமானங்களிடம் மோதினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும் கருதப்படுகிறது.
ஏற்கனவே துருக்கி மற்றும் க்ரீஸ் இடையே எல்லை பிரச்சினை உள்ளது குறிப்பிடத்தக்கது.