இந்திய ஏவுகணைகளை நவீனப்படுத்தும் ஆர்டரை பெற்ற இந்திய நிறுவனம்..! என்ன ஆர்டர் ?

  • Tamil Defense
  • February 14, 2021
  • Comments Off on இந்திய ஏவுகணைகளை நவீனப்படுத்தும் ஆர்டரை பெற்ற இந்திய நிறுவனம்..! என்ன ஆர்டர் ?

பெங்களூரூவை சேர்ந்த நிறுவனம் தான் டோன்போ இமேஜிங் நிறுவனம் ஆகும்.இந்த நிறுவனம் தற்போது பாரத் டைனமிக் நிறுவனத்துடன் இணைந்து பெரிய ஆர்டர் ஒன்றை பெற்றுள்ளது.

அதாவது பாரத் டைனமிக் நிறுவனம் இந்திய இராணுவத்திற்காக பல பில்லியன் டாலர்கள் செலவில் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் தயாரிக்க உள்ளது.இந்த ஏவுகணைகளின் சீக்கரை உள்நாட்டிலேயே இந்த நிறுவனங்கள் மேம்படுத்தி தயாரிக்கும்.

EO-IR (electro-optical-infrared) seeker மற்றும் ஏவுகணையை கட்டுப்படுத்தி இலக்கை நோக்கி ஏவும் Command launcher unit (CLU) ஆகியவற்றை பாரத் டைனமிக் நிறுவனத்திற்கு வழங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக டோன்போ இமேஜிங் நிறுவனத்தின் துணை நிறுவனம் அங்கித் குமார் அவர்கள் கூறியுள்ளார்.