தேஜாஸ் பல வகைகளில் சிறந்தது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

  • Tamil Defense
  • February 2, 2021
  • Comments Off on தேஜாஸ் பல வகைகளில் சிறந்தது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது தேஜாஸ் விமானம் குறிப்பிட்ட சில பகுதிகளில் வெளிநாட்டு விமானங்களை விட திறன் வாய்ந்ததாக இருப்பதாக கூறினார்.

அதாவது என்ஜின், ரேடார், வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி, BVR ஏவுகணைகள் என அதன் வகுப்பில் உள்ள வெளிநாட்டு விமானங்களை விடவும் சிறப்பு வாய்ந்தது என கூறியுள்ளார்.

தேஜாஸ் போர் விமானத்தை வாங்க இந்திய விமானப்படை ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.