அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் டாடா ஏர்பஸ் விமான தயாரிப்பு நிலையம் !!

  • Tamil Defense
  • February 7, 2021
  • Comments Off on அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் டாடா ஏர்பஸ் விமான தயாரிப்பு நிலையம் !!

இந்திய விமானப்படையில் உள்ள ஆவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக ஏர்பஸ் சி295 விமானங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் இந்த விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கும் பொருட்டு ஏர்பஸ் மற்றும் டாடா நிறுவனங்கள் இணைந்துள்ளன.

தற்போது கேபினட் கமிட்டியின் அனுமதிக்காக இத்திட்டம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது, அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக இதற்கான பணிகள் துவங்கும்.

சுமார் 15,000 கோடி ருபாய் மதிப்பில் 56 சி295 விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.