புதிய பாதுகாப்பு அமைச்சரை நியமித்த தைவான்; போர்விமானங்கள் அனுப்பி மிரட்டிய சீனா
1 min read

புதிய பாதுகாப்பு அமைச்சரை நியமித்த தைவான்; போர்விமானங்கள் அனுப்பி மிரட்டிய சீனா

தைவானின் தென்மேற்கு பகுதியில் எட்டு சீன போர்விமானங்கள் ஊடுருவியதை அடுத்து தைவானும் தனது போர்விமானங்களை எச்சரிக்க அனுப்பியது.

தைவானை சீனா தன்னுடைய நாட்டின் பகுதி என கூறி வருகிறது.மறுபுறம் தைவான் அமெரிக்கா உதவியுடன் சீனாவுக்கு எதிராக தன்னை பலப்படுத்தி வருகிறது.

நான்கு ஜே-16 மற்றும் நான்கு ஜேஎச்-7 போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தைவானின் பாதுகாப்பு பலப்படுத்தி நவீனப்படுத்தும் பொருட்டு புதிய பாதுகாப்பு அமைச்சரை தைவான் நியமித்த பிறகு இந்த செயலை சீனா செய்துள்ளது.

தைவான் தற்போது தனது கடற்படைக்கு புதிய நீர்மூழ்கிகள்,எப்-16 விமானங்கள் ஆகியவற்றை வாங்க உள்ளது.மற்றும் தங்களது போர்கப்பல்களை நவீனப்படுத்தியும் வருகிறது.