ஐ.என்.எஸ் விராட் கப்பலை உடைக்க உச்சநீதிமன்றம் தற்காலிக தடை !!

இந்திய கடற்படையின் ஒய்வு பெற்ற விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ் விராட் தற்போது குஜராத் மாநிலத்தில் உடைக்கப்பட்டு வருகிறது.

தற்போது என்விடெக் மரைன் கன்சல்டன்ட்ஸ் எனும் தனியார் நிறுவனம் இந்த கப்பலை மியூசியமாக மாற்ற விரும்புகிறது.

இதனடிப்படையில் கப்பலை உடைக்க தற்காலிக தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச் கப்பலை உடைக்க தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.