ஐந்து பிரம்மாஸ் ஏவுகணைகளை சுமக்கும் திறன் பெறும் சுகோய்30 !!

  • Tamil Defense
  • February 8, 2021
  • Comments Off on ஐந்து பிரம்மாஸ் ஏவுகணைகளை சுமக்கும் திறன் பெறும் சுகோய்30 !!

இந்திய விமானப்படை தனது 272 சுகோய்30 எம்.கே.ஐ விமானங்களில் 42ல் பிரம்மாஸ் ஏவுகணைகளை கொண்டு செல்லும் வகையில் மேம்படுத்தி வருகிறது.

தற்போது வரை ஒரே ஒரு பிரம்மாஸ் ஏவுகணையை மட்டுமே சுமக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இதனையடுத்து பிரம்மாஸ் ஏவுகணைகயின் சிறிய ரக வடிவமான பிரம்மாஸ் என்.ஜி தயாரிக்கப்பட்டது.

இது வழக்கமான பிரம்மாஸ் ஏவுகணையை விட 50% அளவில் சிறியதாக இருந்தாலும் திறன்களில் எவ்வித மாற்றமும் இல்லை.

இதன் காரணமாக ஒரு சுகோய்30 விமானத்தில் இனி ஐந்து பிரம்மாஸ் ஏவுகணைகளை கொண்டு செல்ல முடியும்.

அதாவது ஒவ்வொரு இறக்கையிலும் இரண்டு வீதம் நான்கு மற்றும் அடிப்பகுதியில் ஒன்று என மொத்தமாக ஐந்து ஏவுகணைகள் இனி சுமக்க முடியும்.

இந்த மேம்பாடு இந்திய விமானப்படைக்கு மிகப்பெரும் வலிமையை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.