இந்தியாவின் புதிய வாரியர் ட்ரோன் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • February 2, 2021
  • Comments Off on இந்தியாவின் புதிய வாரியர் ட்ரோன் ஒரு பார்வை !!

இந்தியா தற்போது வாரியர் எனும் ஆளில்லா ட்ரோனை உருவாக்கி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த வாரியர் ட்ரோன் கேட்ஸ் எனப்படும் அமைப்பின் அங்கமாகும், இந்த அமைப்பில் பல்வேறு வகையான ஏவுகணைகளும் அடக்கம்.

இந்த வாரியர் ட்ரோனை தேஜாஸ் விமானம் மூலமாக கட்டுபடுத்த முடியும், அதாவது ஒரே நேரத்தில் பல்வேறு வாரியர் ட்ரோன்களை ஒரு தேஜாஸ் விமானி கட்டுபடுத்த முடியும்.

இந்த ட்ரோன்கள் இரட்டை என்ஜின் மற்றும் ஸ்டெல்த் அம்சங்கள் கொண்டவை மேலும் இவை வானிலிருந்து வான் இலக்கு மற்றும் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை கொண்டு இருக்கும்.

இதில் குறிப்பிடும் படியானது ஹன்டர் ஸ்டெல்த் க்ருஸ் ஏவுகணை, சுமார் 200கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட இது 250கிலோ வெடிபொருளை சுமக்க வல்லது.

அடுத்த 5 வருடங்களில் முதல் ட்ரோன் வெளிவரும் என கூறப்படுகிறது.