பாதுகாப்பு பட்ஜெட் தாக்கல் ; விவரங்கள் உள்ளே !!

  • Tamil Defense
  • February 1, 2021
  • Comments Off on பாதுகாப்பு பட்ஜெட் தாக்கல் ; விவரங்கள் உள்ளே !!

இந்த வருடத்திற்கான பாதுகாப்பு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் கோடி ருபாய் மொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது, அதில் 1 லட்சத்து 16ஆயிரம் கோடி ஒய்வூதியம் மற்றும் ஊதியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கடந்த வருடம் தளவாடங்கள் வாங்க மற்றும் மேம்படுத்த CAPITAL OUTLAY என சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது, இது சுமார் 18% உயர்வாகும்.

கடந்த வருடம் 4 லட்சத்து 31 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆனால் சுமார் 4லட்சத்து 48ஆயிரம் கோடி ருபாய் வரை செலவாகிய நிலையில் இந்த வருடம் சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பு: கடந்த வருடத்தின் அதிக செலவுகள் உள்ளடக்கிய தரவுகள் தான் தரப்பட்டுள்ளது.