வடக்கு கட்டளையகத்தில் ரகசிய தகவல்கள் கசிவு , தரைப்படை ஹவில்தார் கைது !!
1 min read

வடக்கு கட்டளையகத்தில் ரகசிய தகவல்கள் கசிவு , தரைப்படை ஹவில்தார் கைது !!

இந்திய தரைப்படையின் வடக்கு கட்டளையகத்தில் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நக்ரோதாவில் உள்ள 16ஆவது கோர் பிரிவு தலைமையகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாப் ரெஜிமென்ட்டை சேர்ந்த ஹவில்தார் ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

உளவுத்துறையின் ரகசிய கண்காணிப்பு காரணமாக இந்த நபர் சிக்கியுள்ளார், சில வருடங்கள் முன்பே பாகிஸ்தான் அமைப்பால் விலைக்கு வாங்கப்பட்டு உள்ளார்.

தேச விரோத செயலில் ஈடுபட்ட இவருக்கு மிகவும் கடினமான தண்டனையை வழங்க வேண்டுமென முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.