
ரஸ்டம்-2 ட்ரோன் இந்தியாவின் சுதேசி ராணுவ திட்டங்களில் ஒன்றாகும் மிக நீண்ட காலமாகவே இதன் பணிகள் நடைபெற்று பின்னர் வெளிவந்தது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரஸ்டம்-2 ட்ரோன் சுமார் 8மணி நேரம் வரை தொடர்ந்து 16,000 அடி உயரத்தில் பறந்தது.
இதனையடுத்து மீண்டும் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்ட இந்த ட்ரோன் தற்போது 27,000 அடி உயரத்தில் தொடர்ந்து 18மணி நேரம் வரை பறக்கும் திறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான சோதனை விரைவில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள மையத்தில் நடைபெறும் என செய்திகள் தெரிவிக்கின்றன.