
ரோல்ஸ் ராய்ஸ் விமான என்ஜின்களை தயாரிப்பதில் உலகளாவிய நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் என்ஜின்கள் உலகின் பல்வேறு முன்னனி போர் விமானங்கள் மற்றும் சிவிலியன் விமானங்களில் பயன்படுத்தி வரப்படுகிறது.
அந்த வகையில் நமது ஜாகுவார் உள்ளிட்ட போர் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் “அடோர் எம்.கே871” என்ஜினை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த என்ஜின்கள் இந்த பிராந்தியத்தில் உள்ள பல ரோல்ஸ் ராய்ஸ் வாடிக்கையாளர்களுக்கு பேருதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.